சாக்கடை வசதி இல்லாததால் ரோட்டில் பாயும் கழிவு நீர்


சாக்கடை வசதி இல்லாததால் ரோட்டில் பாயும் கழிவு நீர்
x
தினத்தந்தி 23 March 2022 3:50 PM IST (Updated: 23 March 2022 3:50 PM IST)
t-max-icont-min-icon

சாக்கடை வசதி இல்லாததால் ரோட்டில் பாயும் கழிவு நீர்

குன்னத்தூர் அருகே கம்மாள குட்டை ஊராட்சி பொலையம்பாளையத்தில் வடிகால் இல்லாததால் வீடுகளில் வரும் கழிவுநீர் ரோடு வழியே வந்து கொண்டுள்ளது. இந்த ரோடானது குன்னத்தூர்-நம்பியூர் செல்லும் பிரதான சாலை ஆகும். இந்த ரோட்டில் அதிக அளவு 4 சக்கர மற்றும் இருசக்கர வாகனங்கள் சென்று கொண்டிருக்கும். இத்தகைய பிரதான ரோட்டியில் சாக்கடை நீர் வந்து கொண்டிருப்பதால்  இருசக்கர வாகன ஓட்டுனர் மீது எதிரே வரும் இருசக்கர வாகனம் சேர் மற்றும் சகதியை வாரி இரைத்தை செல்லும் அவலம் நடைபெறுகிறது. மேலும் நான்கு சக்கர வாகனம் செல்லும்போது நடந்து வருபவர் மீது சாக்கடை நீரை வாரி இரைத்து செல்கிறது. ஆகவே இப்பகுதியில் வடிகால் அமைத்து கொடுக்க வேண்டி பொதுமக்கள்  வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

Next Story