நாட்டறம்பள்ளி அருகே ரூ.3 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் காருடன் பறிமுதல்


நாட்டறம்பள்ளி அருகே ரூ.3 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் காருடன் பறிமுதல்
x
தினத்தந்தி 23 March 2022 3:57 PM IST (Updated: 23 March 2022 3:57 PM IST)
t-max-icont-min-icon

நாட்டறம்பள்ளி அருகே ரூ.3 லட்சம் மதிப்புள்ள ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்களை, சினிமா பாணியில் போலிசார் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்று பிடித்தனர்.

ஜோலார்பேட்டை

நாட்டறம்பள்ளி அருகே ரூ.3 லட்சம் மதிப்புள்ள ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்களை, சினிமா பாணியில் போலிசார் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்று பிடித்தனர்.

துரத்தி சென்ற போலீசார்

நாட்டறம்பள்ளி அருகே தொடர்ந்து போதை பொருட்கள் கடத்தப்படுவதாக துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்- இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நாட்டறம்பள்ளியை அடுத்த சுண்ணாம்புக் குட்டை பகுதியில் கிருஷ்ணகிரி செல்லும் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சந்தேகப்படும்படியாக ஒரு கார் நின்றது. 

அங்குசென்று காரில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது அவர்கள் கார் பஞ்சர் ஆகிவிட்டது என்று கூறி உள்ளனர். பின்னர் காரில் இருந்தவர்கள் பஞ்சர் ஆன காரை எடுத்துக்கொண்டு வேகமாக புறப்பட்டனர். சுதாரித்துக்கொண்ட போலீசார் அந்த காரை விரட்டிச்சென்றனர். சுமார் 2 கிலோமீட்டர் தூரம் சினிமா பாணியில் துரத்திச் சென்று பயனப்பள்ளி பகுதியில் சுற்றி வளைத்துள்ளனர்.

போதை பொருட்கள் பறிமுதல்

உடனே காரை நிறுத்தி விட்டு அதில் இருந்த 3 பேர் இறங்கி தப்பி ஓடிவிட்டனர். காருக்குள் சோதனை செய்ததில் 26 மூட்டைகளில் 280 கிலோ எடையுள்ள குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அவற்றை காருடன் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.3 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்தசம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story