மாணவிகளை காதல் வலையில் சிக்க வைத்தது எப்படி?


மாணவிகளை காதல் வலையில் சிக்க வைத்தது எப்படி?
x
மாணவிகளை காதல் வலையில் சிக்க வைத்தது எப்படி?
தினத்தந்தி 23 March 2022 9:32 PM IST (Updated: 23 March 2022 9:32 PM IST)
t-max-icont-min-icon

மாணவிகளை காதல் வலையில் சிக்க வைத்தது எப்படி

கோவை

கோவையில் தங்கியிருந்த ஆசிரியர் மணிமாறன், மாணவிகளை காதல் வலையில் சிக்க வைத்தது எப்படி? என்று தனது பரபரப்பு வாக்கு மூலத்தில் தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

மாணவிகள் கடத்தல்

சேலத்தை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் மணிமாறன் கோவை சரவணம்பட்டியில் வசித்து வந்தார். அப்போது அவரிடம் டியூசன் படித்த 11-ம் மாணவியை ஆசை வார்த்தை கூறி கடத்தினார். பின்னர் அந்த மாணவியுடன் கொடைக்கானல், பொள்ளாச்சி உள்பட பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று சுற்றி திரிந்த அவர், குமரி மாவட்டம் சுசீந்தரம் பகுதியில் தங்கியிருந்த போது அந்த வீட்டின் உரிமையாளரின் மகளான கல்லூரி மாணவிக்கும் காதல் வலை விரித்தார். இதில் சிக்கிக்கொண்ட அந்த மாணவியையும் அழைத்து கொண்டு திருப்பதிக்கு சென்றார்.

அப்போது கல்லூரி மாணவி தனது தோழியை தொடர்பு கொண்டு ஆசிரியர் குறித்து புகார் அளித்தார். இதையடுத்து அவர் போலீசாருக்கு தெரிவித்த தகவலின் பேரில் கோவை போலீசார் திருப்பதிக்கு விரைந்து சென்று டியூசன் ஆசிரியர் மணிமாறனை கைது செய்ததுடன், அவரின் பிடியில் இருந்த 2 மாணவிகளையும் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட ஆசிரியர் மணிமாறனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

இந்த நிலையில் ஆசிரியர் மணிமாறன் போலீசில் அளித்த பரபரப்பு வாக்குமூலத்தில் கூறியுள்ளதாவது:-

அரசு பள்ளி ஆசிரியர்


நான் சேலத்தில் அரசு பள்ளி ஆசிரியராக பணிபுரிந்தேன். அப்போது ஒழுங்கீனமாக நடந்து கொண்டதால் என்னை பணி நீக்கம் செய்து விட்டனர். மேலும் என்னுடைய நடவடிக்கை பிடிக்காமல் எனது 2 மனைவிகளும் என்னை விட்டு பிரிந்து சென்று விட்டனர். இதனால் வேறு வழியின்றி கோவைக்கு வேலை தேடி வந்தேன். ஏற்கனவே ஆசிரியராக பணிபுரிந்ததால் என்னிடம் டியூசன் படிக்க மாணவர்கள் வந்தனர். இதில் 11-ம் வகுப்பு படித்து வந்த மாணவி மீது எனக்கு ஆசை ஏற்பட்டது. இதையடுத்து அந்த மாணவிக்கு ஆசை வார்த்தை கூறினேன். அவளும் அதற்கு மயங்க தொடங்கினாள்.

 இதற்கிடையில் அந்த மாணவிக்கு குறிப்பிட்ட சில  பாடங்களில் மதிப்பெண்கள் குறைந்ததால், அவளது பெற்றோர் திட்டி உள்ளனர். இதனால் மனதளவில் அவள் பாதிக்கப்பட்டு இருந்தாள். இதனை பயன்படுத்தி அவள் மீதும் பாசம் காட்டுவது போல தொட்டு பேச தொடங்கி னேன். இதற்கு மறுப்பு தெரிவிக்காத அந்த மாணவி என்மீது விருப்பம் கொள்ள தொடங்கினாள்.

காதல் வலையில் விழுந்தாள்

மேலும் எனது ெதாடுதலில் மயங்கிய அந்த மாணவியை கோவையில் இருந்து கடத்தி செல்ல திட்டமிட்டேன். இதையடுத்து அந்த மாணவியிடம் நாம் கோவையை விட்டு வேறு ஊருக்கு சென்று வாழலாம் என்று தெரிவித்தேன். அவளும் அதற்கு ஒப்புக்கொண்டாள். நான் விரித்த காதல் வலையில் விழுந்து விட்டாள்.

இந்த நிலையில் வேலை இல்லாமல் இருந்ததால் வருமானம் இன்றி தவித்தேன். இந்த நிலையில் நான் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் மற்றும் தெரிந்தவர்களிடம் எனது தந்தைக்கு உடம்பு சரியில்லை என்று கடமான தாருங்கள், திருப்பி தந்து விடுகிறேன் என்று ஏமாற்றி கூறி ரூ.2 லட்சம்  வாங்கினேன். பின்னர் அந்த மாணவியை அழைத்து கொண்டு கொடைக்கானல், பொள்ளாச்சி, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று உல்லாசமாக வாழ்ந்து வந்தோம்.

கல்லூரி மாணவி

இதனிடையே போலீசார் எங்களை கண்டு பிடித்து விடக்கூடாது என்பதற்காக குமரி மாவட்டம் சுசீந்தரம் சென்றோம். அங்குள்ளவர்களிடம் அந்த மாணவியை எனது அக்காள் மகள் என்றும் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டோம் என்றும் தெரிவித்தேன். சுசீந்தரத்தில் மட்டும் நாங்கள் 70 நாட்கள் தங்கியிருந்தோம். 

அப்போதுதான் அந்த வீட்டின் உரிமையாளர் மகளுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அவள் கல்லூரியில் படித்து வந்தாள். அவளது பெற்றோர் மகள் சரியாக படிக்காததால் அடிக்கடி திட்டி வந்துள்ளனர். இதனால் விரக்தியில் இருந்த  அந்த  மாணவிக்கு நான் அடிக்கடி சந்தித்து ஆறுதல் கூறினேன். இந்த நிலையில்தான் அவளது மன அழுத்தத்தை பயன்படுத்தி, அழகான அவளையும் எனது காதல் வலையில் சிக்க வைக்க திட்டமிட்டேன். இதனால் நெருங்கி பழக தொடங்கினேன்.  

ஜாலியாக வாழ்ந்தோம்

எனக்கு ஓரளவு நடனம் தெரியும் என்பதால் நடன ஆசையை அவளுக்குள் விதைத்து, அதன கற்று கொடுப்பது போல்  காதல் வலை வீசினேன்.  இதனால் அவரும் என்னுடன் நெருங்கி பழகி, எனது வலையில் விழுந்தாள்.
இதையடுத்து அந்த மாணவியையும் அழைத்து கொண்டு திருப்பதி சென்றேன். திருப்பதியில் நாங்கள் 50 நாட்கள் வரை தங்கியிருந்தோம்.

 நாங்கள் 3 பேரும் உல்லாச வாழ்க்கை வாழ்ந்ததால் எங்களிடம் இருந்த பணம் விரைவில் தீர்ந்து விட்டது. இதையடுத்து மாணவிகள் இருவரும் வைத்திருந்த 8 பவுன் நகைகளை விற்று அதில் ஜாலியாக வாழ்ந்தோம். பின்னர் அந்த பணமும் காலியாகி விட்டது. இதையடுத்து பழைய பொருட்களை வாங்கி விற்றோம். மேலும் உணவு பார்சல்கள் செய்து விற்பனை செய்தோம். இதில் வரும் வருமானம் போதவில்லை என்பதால் கல்லூரி மாணவியை டீ விற்பனை செய்யக்கூறினேன். அப்போதுதான் போலீசார் எங்களை பிடித்து விட்டனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story