வனப்பகுதியில் காயங்களுடன் விழுந்து கிடந்த பெண் யானை


வனப்பகுதியில் காயங்களுடன் விழுந்து கிடந்த பெண் யானை
x
வனப்பகுதியில் காயங்களுடன் விழுந்து கிடந்த பெண் யானை
தினத்தந்தி 23 March 2022 9:57 PM IST (Updated: 23 March 2022 9:57 PM IST)
t-max-icont-min-icon

வனப்பகுதியில் காயங்களுடன் விழுந்து கிடந்த பெண் யானை

பேரூர்


கோவை மாவட்டம் பேரூர் அருகே  போளுவாம்பட்டி வனச்சரகம், வெள்ளபதி பிரிவு, முள்ளங்காடு பகுதியில் வீரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே 10 வயது மதிக்கத்தக்க, பெண் யானை ஒன்று  காயங்களுடன் விழுந்து கிடந்தது. இதுகுறித்து அறிந்த அந்த பகுதியினர் உடனே வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, வனத்துறை உயர் அதிகாரிகளின் தலைமையில், மண்டல வனக்கால்நடை மருத்துவ அலுவலர்கள்  அடங்கிய மருத்துவக் குழுவினர் நேற்று அந்த பகுதிக்கு விரைந்தனர். அப்போது அந்த யானை நடக்க முடியாமல் சுருண்டு விழுந்து கிடந்தது ெதரியவந்தது. இதனை தொடர்ந்து அந்த யானையை  அங்குள்ள மற்றொரு பாதுகாப்பான இடத்தில் கொண்டு வந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், பெண்யானைக்கு 10 வயது இருக்கும். அதற்கு வனத்துறை மருத்துவ குழுவினர் மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. அந்த யானை உணவு தேடி சென்றபோது தோட்டத்தில் வைத்திருந்த அவுட்டு காய் (நாட்டு வெடிகுண்டு) வெடித்து நாக்கு துண்டித்து காயம் ஏற்பட்டு இருக்கலாம்  என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.

Next Story