என்ஜினீயரிடம் ரூ.21½ லட்சம் மோசடி
என்ஜினீயரிடம் ரூ.21½ லட்சம் மோசடி
கோவை
கோவை துடியலூர் சேரன் காலனியை சேர்ந்தவர் வீரகுமார் (வயது35). இவர் ஒரு தனியார் எலக்ட்ரிக் நிறுவனத்தில் என்ஜினீயராக பணி புரிகிறார். இந்த நிலையில் அவருக்கு வெளிநாடு சென்று வேலை செய்ய ஆசை ஏற்பட்டது. இதையடுத்து வெளிநாடுகளில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்து இணையதளத்தில் தேடினார்.
அதில் ஒரு இணையதளத்தில் நியூசிலாந்து நாட்டில் வேலை இருப்பதாக கூறப்பட்டு இருந்தது.இதையடுத்து கடந்த 14.12.21 அன்று அந்த இணையதளத்தில் கூறப்பட்டிருந்த இ-மெயில் முகவரிக்கு தனது பயோடேட்டா, தொடர்பு எண் உள்ளிட்ட சுய விபரங்களை பதிவு செய்தார்.
இதனைத்தொடர்ந்து ஒரு செல்போன் எண்ணில் இருந்து வீரகுமாருக்கு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் தங்களது படிப்பிற்கு நியூசிலாந்து நாட்டில் வேலை உள்ளது. ஆனால் விசா கட்டணம், வைப்பு தொகை, விமான கட்டணம் உள்ளிட்டவற்றிற்கு பணம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.
செல்போனில் பேசிய நபர் கூறியதை உண்மை என்று நம்பிய வீர குமார், அவர் கேட்ட பணத்தை ஆன்லைன் மூலம் மர்ம நபர் கூறிய வங்கி கணக்கிற்கு ஆன்லைன் மூலம் செலுத்தினார். வீரகுமார் பல்வேறு கட்டங்களாக அந்த வங்கி கணக்கிற்கு ஆன்லைன் மூலம் ரூ.21 லட்சத்து 67 ஆயிரத்து 212 பணம் வழங்கினார்.
ஆனால் பணத்தை பெற்றுக்கொண்ட அந்த நபர் கூறியபடி வேலை வாங்கி தரவில்லை.இதனால் அதிர்ச்சி அடைந்த வீரகுமார், வேலை அல்லது பணத்தை திருப்பி தரும்படி அந்த செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு கேட்டார். ஆனால் அந்த நபர் பணத்தை திருப்பிதரவில்லை. இதனால் வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்து பணம் பறித்தது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story