கோவையில் 5 பேருக்கு கொரோனா


கோவையில் 5 பேருக்கு கொரோனா
x
கோவையில் 5 பேருக்கு கொரோனா

கோவையில் 5 பேருக்கு கொரோனா

கோவை
கோவை மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 6 பேருக்கு கொரோனா உறுதியானது. நேற்று 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்து 29 ஆயிரத்து 909 ஆக அதிகரித்தது. நேற்று ஒரே நாளில் 8 பேர் குணம் அடைந்தனர். இதன் மூலம் இதுவரை 3 லட்சத்து 26 ஆயிரத்து 672 பேர் குணமடைந்து உள்ளனர்.


கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட 78 வயது முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுவரை பலியானோர் எண்ணிக்கை 2,615 ஆக உயர்ந்தது. தமிழகத்தில் நேற்று கோவையில் மட்டுமே கொரோனாவுக்கு உயிரிழப்பு நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது 432 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Next Story