மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்க சிறப்பு முகாம்


மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்க சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 23 March 2022 11:23 PM IST (Updated: 23 March 2022 11:23 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்க சிறப்பு முகாம் நடந்தது.

பொள்ளாச்சி

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி பொள்ளாச்சி வடக்கு, தெற்கு மற்றும் ஆனைமலை வட்டாரங்களில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கு வது தொடர்பாக சிறப்பு முகாம் நடைபெற்றது. 

இதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுபாஷ் தலைமை தாங்கினார். முகாமை கல்வி மாவட்ட அலுவலர் ராஜசேகரன் தொடங்கி வைத்தார். முகாமில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்க அளவெடுக்கும் பணி நடைபெற்றது. பொள்ளாச்சி வடக்கில் 10 மாணவர்களுக்கும், தெற்கில் 6 மாணவர்களுக்கும், ஆனைமலையில் 2 மாணவர்களுக்கும் உதவி உபகரணங்கள் வழங்க அளவெடுக்கப்பட்டது.

 முகாமில் வடக்கு வட்டார கல்வி அலுவலர், ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பு பயிற்றுனர்கள், இயன் முறை மருத்துவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story