புளியந்தோப்பில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் மகன் கைது


புளியந்தோப்பில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் மகன் கைது
x
தினத்தந்தி 24 March 2022 3:56 PM IST (Updated: 24 March 2022 3:56 PM IST)
t-max-icont-min-icon

புளியந்தோப்பில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் மகனை கைது செய்து அவரிடமிருந்து விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சென்னையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், விபத்தை ஏற்படுத்தும் வகையிலும் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அதைத்தொடர்ந்து, கடந்த 21-ந் தேதி இரவு புளியந்தோப்பு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, புளியந்தோப்பு பகுதியில் இருந்து ராயபுரம் மேம்பாலம் வரை அப்போது 5 பேர் கொண்ட கும்பல் அதிநவீன மோட்டார் சைக்கிள்களுடன் வேகமாக பந்தயத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, அவர்களை மடக்கிப் பிடித்த போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனசேகர் என்பவரின் மகனும், தனியார் கல்லூரி மாணவருமான டிவின் குமார் (வயது 20), தண்டையார்பேட்டையை சேர்ந்த மோவின் (20), தனியார் கல்லூரி 3-ம் ஆண்டு மாணவரான ஹரிஷ் குமார் (22), புதுவண்ணாரப்பேட்டை சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவரான பாலாஜி (22), திருவொற்றியூரை சேர்ந்த சட்ட கல்லூரி மாணவருமான சல்மான் (வயது 19) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.


Next Story