போலி காசோலை மூலம் வங்கியில் ரூ.4.90 கோடி மோசடி முயற்சி- தலைமறைவாக இருந்த 5 பேர் கைது
தனியார் நிறுவனத்தின் பெயரில் ரூ.4.90 கோடி காசோலையை போலியாக தயாரித்து வங்கியில் மாற்ற முயன்ற வழக்கில் 5 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
சென்னை எச்.டி.எப்.சி.வங்கியின் சீனியர் மேலாளர் கல்யாண்கிருஷ்ணன் என்பவர், சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவாலை சந்தித்து பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-
எங்களது வங்கியின் பெயரில் போலியான காசோலைகளை தயாரித்து பிரபல கம்பெனியின் கணக்கில் இருந்து ரூ.4.90 கோடி பணத்தை எடுக்க, சாலிகிராமத்தில் உள்ள ஒரு வங்கி கிளையை அணுகி, மோசடி நபர்கள் சிலர் முயற்சித்துள்ளனர். அந்த கும்பல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. இன்ஸ்பெக்டர் மனோகரன் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இந்த நிலையில் மோசடி கும்பலைச் சேர்ந்த சென்னை பெரியார் நகரை சேர்ந்த கலைமாறன் (வயது 44), கொளத்தூரைச்சேர்ந்த லியோலாரன்ஸ் (44), வியாசர்பாடியில் வசிக்கும் அந்தோணி சேசுராஜ் (45), திருநின்றவூர் திருமலை (51), பெரியகுளத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (45) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ராஜ்குமார்தான் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளி என்று போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story