வால்பாறையில் மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம்


வால்பாறையில் மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 24 March 2022 7:16 PM IST (Updated: 24 March 2022 7:16 PM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம் நடந்தது.



வால்பாறை

வால்பாறை அரசு மேல்நிலை பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி கோவை மாவட்ட வால்பாறை வட்டார வளமையம் சார்பில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை வால்பாறை நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி தொடங்கி வைத்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுபாஷ் முன்னிலை வகித்தார். முகாமில் மனவளர்ச்சி குன்றிய 95 பேர், உடல் இயக்க குறைபாடுள்ள 63 பேர், காதுகேளாதோர் 22 பேர், பார்வை திறன் குறைபாடு உள்ள 23 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், புதிய மாற்றுத்திறனாளி அடையாள அட்டை 50 பேருக்கும், பழைய அடையாள அட்டை 70 பேருக்கு புதுப்பித்து வழங்கப்பட்டது. 
முகாமிற்கான ஏற்பாடுகளைவட்டார வளமைய மேற்பார்வையாளர் ராஜாராம் தலைமையில் அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் சிவன்ராஜ், வட்டார வளமைய ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், ஆசிரியர் பயிற்றுனர்கள் ரவிச்சந்திரன், சுகந்தி, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு ஆசிரியர்கள் பிரபா தேன்மொழி, முத்துமாரி, ரம்யா ஆகியோர் செய்திருந்தனர். 

Next Story