3 பேர், பயங்கர ஆயுதங்களுடன் கைது
பல்வேறு குற்றச்சம்பவங்களில் தொடர்புடைய 3 பேரை பயங்கர ஆயுதங்களுடன் போலீசார் கைது செய்துள்ளனர்.
முத்துப்பேட்டை:
பல்வேறு குற்றச்சம்பவங்களில் தொடர்புடைய 3 பேரை பயங்கர ஆயுதங்களுடன் போலீசார் கைது செய்துள்ளனர்.
போலீசார் ரோந்து பணி
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே கோவிலூர் பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மன்னார்குடி சாலையில் சந்தேகத்தின் பேரில் நின்று கொண்டிருந்த 3 பேரை போலீசார் பிடிக்க முயன்றனர். அப்போது அவர்கள் 3 பேரும் பயங்கர ஆயுதங்களுடன் போலீசாரை தாக்க முயன்றனர். உடனே போலீசார் அவர்களை சுற்றிவளைத்து மடக்கி பிடித்து விசாரணை செய்தனர்.
3 பேர் கைது
விசாரணையில் அவர்கள் கோவிலூர் மணல்மேட்டை சேர்ந்த கைலாசம் மகன் மந்திரமூர்த்தி (வயது 24), சரவணன் மகன் குதிரை சுரேஷ் (24), சென்னையை சேர்ந்த முதலி மகன் லியோ கார்த்திக் (22) என்றும், இதில் மந்திரமூர்த்தி அ.தி.மு.க. பிரமுகர் மதன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி என்றும், மேலும் 3 பேர் மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது என்றும் தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் போலீசார் அவர்களிடம் இருந்து அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story