கபடி வீராங்கனை தற்கொலை வழக்கு: மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தந்தை புகார்


கபடி வீராங்கனை தற்கொலை வழக்கு: மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தந்தை புகார்
x
தினத்தந்தி 25 March 2022 2:34 PM IST (Updated: 25 March 2022 2:34 PM IST)
t-max-icont-min-icon

கபடி வீராங்கனை தற்கொலை மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தந்தை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மாங்காட்டை அடுத்த மதனந்தபுரம், பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் தர்மராஜ். காய்கறி வியாபாரி. இவரது இளைய மகள் பானுமதி (வயது 25). முதுகலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு படித்து வந்தார். மாநில மற்றும் தேசிய அளவிலான கபடி போட்டிகளில் பங்கேற்று விளையாடியுள்ளார். இந்த நிலையில், கடந்த 22-ந் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த கபடி போட்டியில் கலந்து விட்டு வீட்டுக்கு வந்த பானுமதி அறைக்கு சென்ற நிலையில், தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.

வேலை கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்துகொண்டதாக போலீஸ் தரப்பில் முதலில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் திடீர் திருப்பமாக அவரது தந்தை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் தன்னுடைய மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவர் விளையாடிய கபடி அணி நிர்வாகம், சக வீரர்கள், பயிற்சியாளர்களிடம் தீவிர விசாரணை நடத்தி தனது மகளின் தற்கொலைக்கு காரணமான நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து மாங்காடு போலீசார் அந்த பெண்ணின் செல்போனை கைப்பற்றி தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


Next Story