அரிய வகை ஆந்தை மீட்பு


அரிய வகை ஆந்தை மீட்பு
x
தினத்தந்தி 25 March 2022 9:45 PM IST (Updated: 25 March 2022 9:45 PM IST)
t-max-icont-min-icon

வேளாங்கண்ணி அருகே அரிய வகை ஆந்தை மீட்கப்பட்டது.

வேளாங்கண்ணி:
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த காமேஸ்வரம் தாண்டவமூர்த்திகாடு பகுதியில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் கால்நடைகள் உள்ளே வராமல் தடுக்க வேலியாக வலை அமைக்கப்பட்டிருந்தது. இந்த வலையில் ஒரு அரிய வகை ஆந்தை சிக்கி கொண்டது. இந்த ஆந்தையின் முகம் இதய வடிவில் இருந்தது. பின்னர் இந்த ஆந்தையை வலையில் இருந்து மீட்டனர். பின்னர் நாகை வனத்துறையினருக்கு  தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினரிடம் ஆந்தையை ஒப்படைத்தனர். வனத்துறையினர் ஆந்தையை  காட்டுப்பகுதியில் கொண்டு விட்டனர்.

Next Story