நிற்காமல் சென்ற 10 பஸ்கள் சிறைபிடிப்பு


நிற்காமல் சென்ற 10 பஸ்கள் சிறைபிடிப்பு
x
தினத்தந்தி 25 March 2022 9:51 PM IST (Updated: 25 March 2022 9:51 PM IST)
t-max-icont-min-icon

நிற்காமல் சென்ற 10 பஸ்கள் சிறைபிடிப்பு

ொதுமக்கள் சிறைபிடித்தனர்.
பஸ்கள் சிறைபிடிப்பு 
 அவினாசி ஒன்றியம் தெக்கலூரில் அதிக அளவில் குடியிருப்புகள், தொழிற்சாலைகள், விசைத்தறி கூடங்கள், வியாபார நிறுவனங்கள் உள்ளன. இங்குள்ள தொழிற்சாலைகள், விசைத்தறி கூடங்களில் வேலை பார்ப்பதற்காக அவினாசி, கருமத்தம்பட்டி, ஆட்டையாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் பஸ்சில் வேலைக்கு வந்து செல்கின்றனர். 
இந்த நிலையில் ஒரு சில பஸ்களை தவிர மற்ற பெரும்பாலான பஸ்கள் தெக்கலூர் பஸ் நிறுத்தத்திற்கு வராமல் பைபாஸ் ரோட்டில் சென்றுவிடுவதாக கூறப்படுகிறது. இதையடுத்து அப்பகுதி பொது மக்கள் நேற்று மாலை பைபாஸ் ரோட்டில் திரண்டு வந்து 4 அரசு பஸ்கள் உள்ளிட்ட 10 பஸ்களை சிறைபிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது
பொதுமக்கள் அவதி
தெக்கலூரில் வட மாநில தொழிலாளர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கி திருப்பூர், அவினாசி, கருமத்தம்பட்டி உள்ளிட்ட ஊர்களுக்கு வேலைக்கு சென்று திரும்புகின்றனர். இதே போல் மற்ற ஊர்களில் இருந்தும் தெக்கலூருக்கு வேலை பார்க்க வருகின்றனர். அவினாசியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ-மாணவிகள் பஸ்சில் சென்று வருகின்றனர்.
ஆனால் பஸ்கள் அனைத்தும் தெக்கலூர் பஸ் நிறுத்தத்திற்கு வராமல் பைபாஸ் ரோட்டில் சென்றுவிடுவதால் நாங்கள் நாள்தோறும் மிகவும் அவதிப்படுகிறோம். சம்பந்தப்பட்ட துறை அதிகாரி இங்கு வந்து அனைத்து பஸ்களும் தெக்கலூர் வந்து பயணிகளை ஏற்றி இறக்கி செல்ல தீர்வுகாண வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
நடவடிக்கை
இது பற்றி தகவல் அறிந்ததும் அவினாசி போலீசார் சம்பவ இடம் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் முடிவில் அனைத்து பஸ்களும் தெக்கலூரில் நின்று செல்ல தருந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறிய பின் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் தெக்கலூர் பைபாஸ் ரோட்டில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

Next Story