புகார் பெட்டி


புகார் பெட்டி
x
தினத்தந்தி 25 March 2022 9:59 PM IST (Updated: 25 March 2022 9:59 PM IST)
t-max-icont-min-icon

புகார் பெட்டி

தடுப்பு வேலி தேவை
பார்வதிபுரத்தில் இருந்து பெருவிளைக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் முருகன் கோவில் அருகில் உள்ள சானலின் மீது சிறிய பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த பகுதியில் சாலையோரம் விபத்து தடுப்பு வேலிகள் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி பாலம் அருகில் சாலையோரம் விபத்து தடுப்பு வேலிகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                                                                 -ஸ்ரீராம், ஆசாரிபள்ளம். 
சீரமைக்க வேண்டும்
நாகர்கோவில் வடசேரியில் மீன்சந்தை உள்ளது. இந்த சந்தையில் உள்ள கழிப்பறை முறையாக பராமரிக்காததால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு காணப்படுகிறது. இதனால், சந்தைக்கு மீன் வாங்க வரும் பொதுமக்கள் கழிவறையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கழிவறையை சுத்தம் செய்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                                                                    -சதீஷ்பாபு, கலுங்கடி.
வீணாகும் குடிநீர்
நாகர்கோவில் மீனாட்சிபுரம் தோப்பு வணிகர் தெரு உள்ளது. இந்த தெருவில் அமைக்கப்பட்டுள்ள குழாய் சேதமடைந்து  குடிநீர் வீணாக கழிவுநீர் ஓடையில் பாய்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த குழாயை சீரமைத்து குடிநீர் வீணாகுவதை தடுக்க வேண்டும். 
                                                                        -கே.மணிகண்டன், வடசேரி

இடையூறான மரங்கள்
மஞ்சத்தோப்பு சந்திப்பில் இருந்து மஞ்சத்தோப்பு காலனிக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக பல வாகனங்கள் தினசரி சென்று வருகின்றன. அவ்வாறு செல்லும் வாகனங்களுக்கு இடையூறாக சாலையில் 3 தென்னை மரங்கள் நிற்கின்றன. இதனால், விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள தென்னை மரங்களை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                                      -கி.சந்தோஷ்குமார், அம்பலக்குளம்.

மின்கம்பம் மாற்றப்படுமா?
வேர்க்கிளம்பி அருகே மணலிக்கரை உள்ளது. இந்த பகுதியில் வெண்மாறபள்ளிவிளை தெருவில் எப் 1-24 எண் கொண்ட மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பத்தின் அடிப்பகுதி சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே அந்த பகுதிைய கடந்து செல்கின்றனர். எனவே, சேதமடைந்த கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பத்தை நடுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                                                                  -சுஜின், மணலிக்கரை.


Next Story