2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
கடலூர்,
பண்ருட்டி அருகே சன்னியாசிப்பேட்டையை சேர்ந்தவர் சேகர் (வயது 50). தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்த 4-ம் வகுப்பு படிக்கும் 2 சிறுமிகள் இவரிடம் அடிக்கடி வந்து விளையாடி வந்தனர். அதேபோல் கடந்த 8.9.2019 அன்றும் அந்த சிறுமிகள் அவரிடம் விளையாடிக்கொண்டிருந்தனர். பின்னர் அந்த 2 சிறுமிகளும் அங்குள்ள கரும்பு தோட்டத்திற்கு சென்றனர்.
இதைபார்த்த சேகர், அவர்களை பின் தொடர்ந்து சென்று, சிறுமிகள் 2 பேருக்கும் பாலியல் தொல்லை கொடுத்தார். இது பற்றி அந்த சிறுமிகள் தங்களது பெற்றோர்களிடம் நடந்த விவரத்தை கூறினர். இதையடுத்து அவர்கள் பண்ருட்டி மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சேகரை கைது செய்தனர்.
7 ஆண்டு சிறை
இந்த வழக்கு கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், நேற்று நீதிபதி எழிலரசி தீர்ப்பு கூறினார்.
அவர் தனது தீர்ப்பில், இவ்வழக்கில் சேகர், அந்த 2 சிறுமிகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்தது நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 7 ஆண்டு சிறை தண்ட னையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
மேலும் பாதிக்கப்பட்ட 2 சிறுமிகளுக்கும் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர், அரசின் ஏதாவது ஒரு நலத் திட்டத் தில், தலா ரூ.2 லட்சத்தை இழப்பீடு தொகையாக 30 நாட்களுக்குள் வழங்கவும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலாச்செல்வி ஆஜராகி வாதாடினார்.
Related Tags :
Next Story