காஞ்சீபுரம் அருகே ரூ.37 கோடி அரசு ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு


காஞ்சீபுரம் அருகே ரூ.37 கோடி அரசு ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
x
தினத்தந்தி 26 March 2022 9:50 PM IST (Updated: 26 March 2022 9:50 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் அருகே ஏரி பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்த ரூ.37 கோடி அரசு ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது.

காஞ்சீபுரம்,

ஐகோர்ட்டு உத்தரவின்படி தமிழகம் முழுவதும் ஆறு, ஏரி, குளம், உள்ளிட்ட நீர் ஆதாரங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்களை மீட்கும் பணிகளை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.அதன்படி காஞ்சீபுரம் மாவட்டத்தில் நீர்நிலை ஆதாரங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்களை மீட்டெடுக்கும் பணிகள் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி அவர்களின் உத்தரவின்படி நாள்தோறும் நடைபெற்று வருகிறது. காஞ்சீபுரம் தாலுக்காவிற்கு உட்பட்ட வதியூர், முட்டவாக்கம், பெரும்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் பொதுப்பணி துறை கட்டுப்பாட்டிலுள்ள ஏரிகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது.

இந்த ஆக்கிரமிப்புகளை காஞ்சீபுரம் ஆர்.டி.ஓ. ராஜலட்சுமி தலைமையில் காஞ்சீபுரம் தாசில்தார் பிரகாஷ் பொதுப்பணித்துறை பொறியாளர் மார்க்கண்டேயன் மற்றும் வருவாய்த்துறை பொதுப்பணித்துறை அதிகாரிகள் வதியூர் ஏரியில் கிராமத்தில் 50 ஏக்கரும், முட்டவாக்கம் ஏரியில் 25 ஏக்கரும், பெரும்பாக்கம் ஏரியில் 60 ஏக்கரும் என மொத்தம் ரூ.37 கோடி மதிப்பிலான 135 ஏக்கர் ஏரி புறம்போக்கு நிலங்களை பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் மீட்டு எடுத்தனர்.

Next Story