நாட்டு துப்பாக்கியுடன் சிக்கிய கஞ்சா கடத்தல் கும்பல்
நாட்டு துப்பாக்கியுடன் சிக்கிய கஞ்சா கடத்தல் கும்பல் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஆந்திரா மாநிலம் நகரி பகுதியிலிருந்து கஞ்சா பொட்டலங்களை ஒரு கும்பல் மோட்டார் சைக்கிளில் திருத்தணிக்கு கடத்தி வருவதாக திருத்தணி போலீஸ் உதவி கமிஷனர் கிருஷ்ணராஜிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் ஏழுமலை உத்ரவின்படி திருத்தணி அடுத்த வீரக நல்லூர் பஸ் நிறுத்தம் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திராவில் இருந்து திருத்தணி நோக்கி வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்களை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
இந்த சோதனையில் அவர்களிடம் இருந்த கஞ்சா சிக்கியது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அரக்கோணம் கையுனூர் பகுதியை சேர்ந்த பிரசாந்த்(வயது22), பார்த்தசாரதி(22), திருத்தணி அருங்குளம் கண்டிகை சேர்ந்த பவன்குமார்(23) என்பவர்களை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்த 5¾ கிலோ கஞ்சா, நாட்டு துப்பாக்கி, மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். குற்றவாளிகள் 3 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story