திருக்கோவிலூர் ஒன்றியத்தில் ஊராட்சி நிதியில் முறைகேடு குறித்து விசாரணை தொடங்கியது கலெக்டர் நடவடிக்கை
திருக்கோவிலூர் ஒன்றியத்தில் ஊராட்சி நிதியில் முறைகேடு குறித்து விசாரணை தொடங்கியது கலெக்டர் நடவடிக்கை
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் மின்சார உபரி நிதியாக இருந்த ரூ.2 கோடியை பணிகள் செய்ததாக கணக்கு மாற்றம் செய்து முறைகேடு செய்துள்ளதாக புகார் எழுந்தது. இதுகுறித்து திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதரிடம் புகார் மனு கொடுத்தனர். மேலும் திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பல்வேறு ஊராட்சிகளில் புதிய தலைவர்களிடம் இதுவரை பொறுப்புகள் ஒப்படைக்காமல் உள்ளது. இதற்கும் ஊராட்சி செயலாளர்கள் மற்றும் ஊராட்சி முன்னாள் தலைவர்கள் காரணம் எனவும் அந்த மனுவில் கூறியிருந்தனர்.
இந்த மனு குறித்த விசாரணைக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டார். அதன் பேரில் திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ரேச்சல்கலைச்செல்வி மற்றும் துரைராஜ் ஆகியோர் புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஊராட்சி செயலாளர்கள் மற்றும் ஊராட்சிமன்ற முன்னாள் தலைவர்களை நேரில் அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியத்தில் மட்டும் ரூ.20 கோடிக்கு ஊராட்சி பணம் கையாடல் செய்து முறைகேடு நடந்துள்ளது தெரியவந்துள்ளது. விசாரணையை விரைந்து முடித்து அறிக்கை மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் அதன் பின்னர் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story