வீட்டில் தனியாக இருந்த 10 ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை டிரைவர் போக்சோவில் கைது

பொள்ளாச்சி அருகே வீட்டில் தனியாக இருந்தபள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிரைவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே வீட்டில் தனியாக இருந்தபள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிரைவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
பாலியல் தொல்லை
பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி அந்தப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறாள். மண்ணூரை சேர்ந்த ஆட்ேடா டிரைவரான முகமது தாரிக் (வயது 21) என்பவர் இந்த மாணவியிடம் பேசி வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று அந்த மாணவி தனது வீட்டில் தனியாக இருந்தார். அப்போது திடீரென்று வீட்டுக்கு வந்த முகமது தாரிக், அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.
டிரைவர் கைது
இது குறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது குறித்து போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் முகமது தாரிக்கை பிடித்து விசாரணை செய்ததில், அவர் அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் முகமது தாரிக்கை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story






