கிணத்துக்கடவில் ரேஷன்கடை முன்பு தேங்கி நிற்கும் கழிவுநீர்


கிணத்துக்கடவில் ரேஷன்கடை முன்பு தேங்கி நிற்கும் கழிவுநீர்
x
தினத்தந்தி 28 March 2022 10:56 PM IST (Updated: 28 March 2022 10:56 PM IST)
t-max-icont-min-icon

கிணத்துக்கடவு பேரூராட்சி கல்லாங்காட்டுபுதூரில் ரேஷன்கடை முன்பு கழிவுநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகிறார்கள்.

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு பேரூராட்சி கல்லாங்காட்டுபுதூரில் ரேஷன்கடை முன்பு கழிவுநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகிறார்கள்.
 
தேங்கி நிற்கும் கழிவுநீர்

கிணத்துக்கடவு பேரூராட்சி 13-வது வார்டில் கல்லாங்காட்டு புதூர் உள்ளது. இந்த பகுதியில் ரேஷன் கடை, அங்கன்வாடி மையம் ஆகியவை அருகருகே உள்ளது. இந்த பகுதியில் சாக்கடை கால்வாய் உள்ளது.

4 வழிச்சாலை அமைத்ததால் இந்த சாக்கடை செல்ல வழியில்லாமல் போனது. இதனால் சாக்கடை கழிவுநீர் ரேஷன் கடை முன்பு தேங்கி நிற்கிறது. 

இதன் காரணமாக அந்த வழியாக செல்ல முடியாத அளவுக்கு கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகிறார்கள்.

இது குறித்து அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:- 

சேறும் சகதி

சாக்கடை செல்ல இடம் இல்லாததால் ரேஷன் கடை முன்பு தேங்கி வருகிறது. இது கல்லாங்காட்டு புதூருக்கு செல்லும் சாலை ஆகும். இந்த சாலையிலேயே இதுபோன்று கழிவுநீர் தேங்கி இருப்பதால் சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது.

இருசக்கர வாகனங்களில் வரும்போது சில நேரத்தில் நிலைதடுமாறி கீழே விழக்கூடிய நிலையும் நீடித்து வருகிறது. மேலும் இந்த ரேஷன் கடைக்கு பின்னால்தான் பால்வாடி மையம் உள்ளது. 

உடனடி நடவடிக்கை

எனவே இங்கு படிக்கும் சிறுவர்களும், இந்த ரேஷன் கடைக்கு வரும் பொதுமக்களும் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். கடும் துர்நாற்றத்தை சகித்துக்கொண்டு பொருட்கள் வாங்கக்கூடிய நிலை ஏற்பட்டு உள்ளது. 

இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

எனவே மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து இங்கு தொற்றுநோய் ஏற்படுவதற்கு முன்பு கழிவுநீர் தேங்கி நிற்பதை சரிசெய்து, அது சீராக செல்ல வழிவகை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

1 More update

Next Story