நஞ்சப்பா சாலையில் உள்ள நகர் நல மையத்தில் மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்

நஞ்சப்பா சாலையில் உள்ள நகர் நல மையத்தில் மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்
கோவை
கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் நஞ்சப்பா சாலையில் உள்ள நகர் நல மையம் மற்றும் கணபதியில் உள்ள நகர் நல மையத்தில் மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, கர்ப்பிணி தாய்மார்கள், தாய் சேய்களுக்கான தடுப்பூசி, சிகிச்சை முறை மற்றும் பதிவேடுகளை பார்வை யிட்டார்.
அதைத்தொடர்ந்து நகர்நல மையங்களில் பிரசவித்து வீடு திரும்பிய பெண்களை செல்போனில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.
அப்போது மகப்பேறு நிதி, குழந்தைகளுக்கு முறையாக தடுப்பூசிகள் போடுகிறார்களா என்று கேட்டறிந்தார்.
இதைத்தொடர்ந்து, அவர், மாநகராட்சி வடக்கு மண்டலம் 26-வது வார்டு பீளமேட்டில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப் பட்டு வரும் நல்வாழ்வு மைய கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார்.
Related Tags :
Next Story






