கோவை சுங்கத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணி மனை முன் டிரைவர், கண்டக்டர்கள் உள்பட போக்குவரத்து பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

கோவை சுங்கத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணி மனை முன் டிரைவர், கண்டக்டர்கள் உள்பட போக்குவரத்து பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
கோவை
கோவை சுங்கத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணி மனை முன் டிரைவர், கண்டக்டர்கள் உள்பட போக்குவரத்து பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில்,
சுங்கம் பணிமனையில் பணியாற்றும் போக்குவரத்து பணியாளர்கள் குடும்ப நிகழ்ச்சி, இறப்பு உள் ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு விடுமுறை எடுத்தால் கூட ‘ஆப்சென்ட்' பதிவிடப்படுகிறது.
இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடும் கிளை மேலாளரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்றனர்.
அவர்களிடம், போக்குவரத்து கழக அதிகாரிகள் பேச்சுவார்த் தை நடத்தினர். இதில் இதுவரை 57 பேருக்கு ஆப்சென்ட் பதிவிடப்பட்டு இருந்ததாகவும்,
அது தற்போது 30 பேருக்கு குறைக் கப்பட்டு உள்ளதாகவும், கூடிய விரைவில் அனைவருக்கும் இந்த பிரச்சினை சரி செய்யப்படும் என்றனர்.
இதனால் சமாதானம் அடைந்த போக்குவரத்து பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர்.
Related Tags :
Next Story






