தருமபுரம் ஆதீனம் பாதயாத்திரை


தருமபுரம் ஆதீனம் பாதயாத்திரை
x
தினத்தந்தி 29 March 2022 9:53 PM IST (Updated: 29 March 2022 9:53 PM IST)
t-max-icont-min-icon

தருமபுரம் ஆதீனம் பாதயாத்திரை

திருக்கடையூர், 
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் குடமுழுக்கு கடந்த 27-ந் தேதி நடைபெற்றது. இதையொட்டி தருமபுர ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமிகள் அவரது வழிபாட்டு கடவுளான சொக்கநாத பெருமாளுடன் குருலிங்க சங்கம பாதயாத்திரையாக மயிலாடுதுறையிலிருந்து திருக்கடையூர் கோவிலுக்கு வந்தார். குடமுழுக்கை முடித்துவிட்டு நேற்று முன்தினம் தருமபுரம் ஆதீனம் சொக்கநாதருடன் தான்தோன்றீஸ்வரர் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து இரவு அங்கு தங்கினார். நேற்று விளநகரில் உள்ள துறைகாட்டும் வள்ளலார் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்றார். அவருக்கு ஆக்கூர் ஊராட்சி தலைவர் சந்திரமோகன், துணைத் தலைவர் சிங்காரவேலு, மற்றும் கிராம மக்கள் பூரண கும்ப மரியாதை அளித்தனர்.
1 More update

Next Story