ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் ரூ 47½ லட்சம் உண்டியல் வருமானம்


ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் ரூ 47½ லட்சம் உண்டியல் வருமானம்
x
தினத்தந்தி 29 March 2022 9:54 PM IST (Updated: 29 March 2022 9:54 PM IST)
t-max-icont-min-icon

ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் ரூ 47½ லட்சம் உண்டியல் வருமானம் கிடைத்து உள்ளது.

பொள்ளாச்சி

ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு கோவை மாவட்டம் மட்டுமல்லாது வெளிமாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்ய வருகின்றனர். 

இந்த நிலையில் கோவில் வளாகத்தில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்கு 22 நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த உண்டியல் திறக்கப்பட்டு எண்ணும் பணி நடைபெற்றது.

இந்த பணியில் பக்தர்கள், தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். நிரந்தர உண்டியல்களில் ரூ.46 லட்சத்து 13 ஆயிரத்து 752, தங்கம் 206 கிராம், வெள்ளி 216 கிராம் இருந்தது. 

அன்னதான உண்டியலில் ரூ.1 லட்சத்து 35 ஆயிரத்து 114 இருந்தது. உண்டியல் எண்ணும் பணியில் கோவில் உதவி ஆணையர் கருணாநிதி, தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோவில் உதவி ஆணையர் ஹர்சினி, கோவில் கண்காணிப்பாளர் தமிழ்வாணன், ஆய்வாளர் குறிஞ்சி செல்வி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

1 More update

Next Story