மண்டல தலைவர்களாக தி.மு.க.வை சேர்ந்த 5 பேர் போட்டியின்றி தேர்வு


மண்டல தலைவர்களாக தி.மு.க.வை சேர்ந்த 5 பேர் போட்டியின்றி தேர்வு
x
மண்டல தலைவர்களாக தி.மு.க.வை சேர்ந்த 5 பேர் போட்டியின்றி தேர்வு
தினத்தந்தி 30 March 2022 10:07 PM IST (Updated: 30 March 2022 10:07 PM IST)
t-max-icont-min-icon

மண்டல தலைவர்களாக தி.மு.க.வை சேர்ந்த 5 பேர் போட்டியின்றி தேர்வு

கோவை

கோவை மாநகராட்சி மண்டல தலைவர்கள் தேர்தல் நேற்று காலை 9.30 மணி அளவில் நடைபெற்றது. இந்த தேர்தலையொட்டி கவுன்சிலர்கள் காலை 9 மணி முதலே கூட்ட அரங்கிற்கு வரத் தொடங்கினர். அதன்பிறகு வேட்புமனு தாக்கல் தொடங்கியது. ஒவ்வொரு மண்டலத்திற்கும் வேட்புமனு தாக்கல் செய்யுமாறு தேர்தல் அதிகாரியும், ஆணையாளருமான ராஜகோபால் சுன்கரா கேட்டுக்கொண்டார். 

ஒவ்வொரு மண்டலத்திற்கும் தனித்தனியாக தேர்தல் நடைபெற்றது. அப்போது தி.மு.க சார்பில் கிழக்கு மண்டல தலைவர் பதவிக்கு இலக்குமி இளஞ்செல்வி (52-வது வார்டு), மேற்கு மண்டலத்தலைவர் பதவிக்கு தெய்வயானை தமிழ்மறை (36-வது வார்டு),  மத்திய மண்டலத்துக்கு மீனா லோகு (46-வது வார்டு), தெற்கு மண்டலத்துக்கு தனலட்சுமி (95-வது வார்டு), வடக்கு மண்டலத்துக்கு கதிர்வேல் (10-வது வார்டு ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.

இவர்களை எதிர்த்து யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இதைத்தொடர்ந்து அவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
வெற்றி பெற்ற மண்டல தலைவர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா சான்றிதழ் வழங்கினார். மேயர் கல்பனா மண்டல தலைவர்களுக்கு சால்வை போர்த்தி வாழ்த்தினார்.

அ.திமுக கவுன்சிலர்கள் சர்மிளா சந்திரசேகர் (38-வது வார்டு), பிரபாகரன் (47-வது வார்டு), ரமேஷ் (90-வது வார்டு) ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.தேர்தலைப் புறக்கணித்தனர்.

இது தவிர 13-வது வார்டு கவுன்சிலர் சுமதி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), 9-வது வார்டு கவுன்சிலர் சரசுவதி (தி.மு.க.), 86-வது வார்டு கவுன்சிலர் அகமது கபீர் (மனிதநேய மக்கள் கட்சி), 72-வது வார்டு கவுன்சிலர் கார்த்திக் செல்வராஜ் (தி.மு.க.) ஆகியோரும் தேர்தலின்போது கலந்துகொள்ளவில்லை.
1 More update

Next Story