ஆழியாறில் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா தொடங்கியது

ஆழியாறில் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா தொடங்கியது
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே ஆழியாறில் கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும்.
இந்த ஆண்டிற்கான திருவிழா இரவு பூச்சாட்டுதல், கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 5-ந்தேதி இரவு கம்பம் போடுதல், 7-ந்தேதி காலை ஆதாளியம்மன் கோவில் தீர்த்தம், 9-ந்தேதி தேவி குளம் தீர்த்தம், 10-ந்தேதி திருமூர்த்தி மலை கோவில் தீர்த்தம், 11-ந்தேதி மாசாணியம்மன் கோவில் தீர்த்தம், 12-ந்தேதி காலை ஆழியாறு தீர்த்தம் கொண்டு வரப்படுகிறது.
இரவு சக்தி கும்பம் அழைத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. 13-ந்தேதி காலை கோவிலுக்கு பக்தர்கள் மாவிளக்கு எடுத்து வருதல், பின்னர் அம்மனுக்கு திருக்கல்யாணம் ஆகியவை நடக்கிறது.
14-ந்தேதி காலை அம்மன் திருவீதி உலா, மாலை மஞ்சள் நீராடுதல், அபிஷேக பூஜையும், 17-ந்தேதி மகாமுனி பூஜையும் நடைபெறுகிறது.
Related Tags :
Next Story






