கணியூர் சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்த்தப்பட்டதால் வாகன ஓட்டிகள் கவலை அடைந்து உள்ளனர்


கணியூர் சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்த்தப்பட்டதால் வாகன ஓட்டிகள் கவலை அடைந்து உள்ளனர்
x
தினத்தந்தி 31 March 2022 6:28 PM IST (Updated: 31 March 2022 6:28 PM IST)
t-max-icont-min-icon

கணியூர் சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்த்தப்பட்டதால் வாகன ஓட்டிகள் கவலை அடைந்து உள்ளனர்


கருமத்தம்பட்டி

கணியூர் சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்த்தப்பட்டதால் வாகன ஓட்டிகள் கவலை அடைந்து உள்ளனர்.

கணியூர் சுங்கச்சாவடி

கோவை -அவினாசி தேசிய நெடுஞ்சாலையில் (என்.எச். 544) கருமத்தம்பட்டியை அடுத்த கணியூரில் சுங்கச்சாவடி உள்ளது.  நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் சுழற்சி முறையில் சுங்க கட்டணம் உயர்த்தப்படுகிறது. 

அதன்படி சுங்க கட்டணம் உயர்த்தப்படுவதாக மத்திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

கட்டணம் உயர்வு

அந்த வகையில் கோவை மாவட்டம் கணியூர் சுங்கச்சாவடியில் நேற்று முதல் சுங்க கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது. 

அந்த சுங்கச் சாவடியில் கார், வேன், ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் ஒரு முறை கடந்து செல்ல ரூ.100 ஆக இருந்த கட்டணம் இன்று முதல் ரூ.110 ஆக உயருகிறது. 

ஒரு முறை சென்றுவிட்டு 24 மணி நேரத்திற்குள் அதே வழித் தடத்தில் திரும்பி வர ரூ.150 ஆக இருந்த கட்டணம் ரூ.165 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

கனரக வாகனங்கள்

மினி பஸ், இலகு ரக வாகனங்களுக்கு ரூ.155 ஆக இருந்த கட்டணம் ரூ.170 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. இதேபோல் லாரி, பஸ்களுக்கு ரூ.315 ஆக இருந்த கட்டணம் ரூ.345 ஆக உயர்த்தப் பட்டு உள்ளது. 

இது தவிர மிகப்பெரிய கனரக வாகனங்களுக்கு ரூ.480 ஆக இருந்த கட்டணம் ரூ.525 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

இது குறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

 இதனால் சொந்த வாகனங்களில் நீண்ட தூர ஊர்களுக்கு பயணிப்பவர்கள் கவலை அடைந்து உள்ளனர். 

சுங்கக் கட்டணமும் உயர்த்தப்பட்டு உள்ளதால் பயணச் செலவு, கனரக வாகனங்களுக்கான வாடகை ஆகியவை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. 

சாலைகள் எந்த வகையிலும் மேம்படுத்தப்படாத நிலையில் சுங்க கட்டணத்தை உயர்த்துவதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
1 More update

Next Story