கோவை மாநகராட்சி சார்பில் கவுன்சிலர்களுக்கு சிம்கார்டு வழங்கப்பட்டது. ஆனால் செல்போன் கொடுத்ததால் அவர்கள் அதிருப்தி அடைந்தனர்

கோவை மாநகராட்சி சார்பில் கவுன்சிலர்களுக்கு சிம்கார்டு வழங்கப்பட்டது. ஆனால் செல்போன் கொடுத்ததால் அவர்கள் அதிருப்தி அடைந்தனர்
கோவை
கோவை மாநகராட்சி சார்பில் கவுன்சிலர்களுக்கு சிம்கார்டு வழங்கப்பட்டது. ஆனால் செல்போன் கொடுத்ததால் அவர்கள் அதிருப்தி அடைந்தனர்.
கோவை மாநகராட்சி
கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளுக்கும் கடந்த மாதம் 19-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது.
இதில் 96 வார்டுகளில் தி.மு.க. கூட்டணி கவுன்சிலர்களும், 3 வார்டுகளில் அ.தி.மு.க., ஒரு வார்டில் எஸ்.டி.பி.ஐ-யும் வெற்றி பெற்று பதவி ஏற்றுக் கொண்டனர்.
இதையடுத்து கோவை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்யப் பட்டு விவாதமும் நடந்து முடிந்தது.
இந்தநிலையில் கவுன்சிலர்க ளை தொடர்பு கொள்ள வசதியாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் செல்போன் எண்களை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
செல்போன் எண்கள்
இந்த நிலையில், மாநகராட்சி சார்பில் 100 கவுன்சிலர்களுக்கும் செல்போன் சிம்கார்டு (எண்) வழங்கப்பட்டது. கவுன்சிலர்களின் வார்டை குறிப்பது போல், அந்த எண்ணில் முடியும் சிம்கார்டு வழங்கப்பட்டது.
உதாரணமாக 1-வது வார்டு கவுன்சிலருக்கு 89255 14001 என்று 1-ல் முடியும் வகையில் சிம்கார்டு எண் வழங்கப்பட்டு உள்ளது.
100-வது வார்டுக்கு 100 என்று முடியும் வகையில் சிம்கார்டு வழங்கப்பட்டு உள்ளது.
77-வது வார்டு கவுன்சிலருக்கு தொழில் நுட்ப கோளாறு காரணமாக 73050 28677 என்ற எண் கொடுக்கப் பட்டு உள்ளது.
செல்போன் கொடுக்காமல் சிம்கார்டு எண் மட்டும் வழங்கப்பட்டு உள்ளதால் கவுன்சிலர்கள் அதிருப்தி அடைந்தனர்.
நிதி பற்றாக்குறை
இது குறித்து மாநகராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், நிதி பற்றாக்குறை காரணமாக கவுன்சிலர்களுக்கு செல்போன் வழங்கப்பட வில்லை.
நிதி பற்றாக்குறை சரி செய்யப்பட்டால் கவுன்சிலர்களுக்கு செல்போனும் வழங்கப்படும்.
மேயர் மற்றும் துணை மேயர் சிம்கார்டுகளை அவர்களின் உதவியாளரிடம் கொடுக்க ஆலோசிக்கப்பட்டு உள்ளது.
கவுன்சிலர்களின் செல்போன் எண் விரையில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்றனர்.
Related Tags :
Next Story






