புதிதாக கட்டப்பட்ட 2 புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை முன்னாள் அமைச்சர் வேலுமணி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்

புதிதாக கட்டப்பட்ட 2 புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை முன்னாள் அமைச்சர் வேலுமணி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்
பேரூர்
கோவையை அடுத்த ஆலாந்துறை பேரூராட்சி அலுவலகம் முன் குழந்தைகள் வளர்ச்சி மையத்தின் சார்பில் பழைய அங்கன்வாடி மைய ஓட்டு கட்டிடத்தில் 2 அங்கன்வாடி மையங்கள் உள்ளன.
இங்கு 25 மற்றும் 20 என மொத்தம் 45 குழந்தைகள் படித்து வந்தனர். இதில் பழைய ஆபத்தான ஓட்டு கட்டிடத்திற்கு பதிலாக புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை அளித்தனர்.
இதைத்தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு நிதியின் மூலம், தலா ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் மொத்தம் ரூ.16 லட்சம் செலவில் வகுப்பறை மற்றும் சமையலறை வசதிகளுடன் 2 புதிய அங்கன்வாடி மைய கட்டிடங்கள் கட்டப்பட்டது.
இந்த நிலையில் புதிதாக கட்டப்பட்ட 2 புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை தொண்டாமுத்தூர் எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இதற்கு, அங்கன்வாடி மைய குழந்தைகளின் பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.
Related Tags :
Next Story






