விக்கிரவாண்டி பேரூராட்சி மன்ற கூட்டம்


விக்கிரவாண்டி பேரூராட்சி மன்ற கூட்டம்
x
தினத்தந்தி 31 March 2022 9:46 PM IST (Updated: 31 March 2022 9:46 PM IST)
t-max-icont-min-icon

விக்கிரவாண்டி பேரூராட்சி மன்ற கூட்டம் நடந்தது.

விக்கிரவாண்டி, 

விக்கிரவாண்டி பேரூராட்சி மன்றத்தின் முதல் சாதாரண கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர் அப்துல் சலாம் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பாலாஜி முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் அண்ணாதுரை வரவேற்றார். இளநிலை உதவியாளர் ராஜேஷ் தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் பணி நியமனக்குழு மற்றும் வரி மேல் முறையீட்டு குழு தேர்தல் நடந்தது. இதில் 4-வது வார்டு கவுன்சிலர் சர்க்கார் பாபு நியமனக்குழு மற்றும் வரி மேல் முறையீட்டு குழு தலைவராக ஒருமனதாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். குழு உறுப்பினர்களாக கவுன்சிலர்கள் கனகா சக்திவேல், ஆனந்தி, சுதா பாக்கியராஜ், வெண்ணிலா காத்தவராயன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர். கூட்டத்தில் மன்ற உறுப்பினர்கள் பிரியா பூபாலன், சுரேஷ், ரமேஷ், ரேவதி வீராசாமி, புஷ்பராஜ், வீரவேல், சுபா சிவஞானம், பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் விசுவநாதன், மேற்பார்வையாளர் ராமலிங்கம், கணினி ஆபரேட்டர் கீதா உள்பட பலர் கலந்து கொண்டனர். 
1 More update

Next Story