காஞ்சீபுர மாவட்ட அண்ணா மறுமலர்ச்சி திட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
அண்ணா மறுமலர்ச்சி திட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.
ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் பகுதி II கிராம ஊராட்சிகளில் செயல்படுத்துவதற்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.
பின்னர் மாவட்ட கலெக்டர் பேசுகையில்:-
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டமானது ஒரு முழுமையான திட்டமாகும். அனைத்து கிராம ஊராட்சிகளுக்கு தேவையான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கத்தோடு செயல்படுத்தப்படும்.
இந்த திட்டத்தின் கீழ் கான்கிரீட் சாலைகள், தெரு விளக்குகள் அமைத்தல், குளங்கள் புனரமைத்தல், தளவாட பொருட்கள் மற்றும் நூல்களுடன் ஊரக நூலகங்கள் அமைத்தல், புதிய இடுகாடு, சுடுகாடு மற்றும் பழைய இடுகாடு, சுடுகாடுகளில் வசதிகள் ஏற்படுத்துதல் மற்றும் தேவையான விளையாட்டு உபகரணங்களுடன் பள்ளி மற்றும் சமுதாய விளையாட்டு மையங்கள் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
தற்போது அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் பகுதி II-ன் கீழ் உத்திரமேரூர் ஒன்றியத்தில் செயல்படுத்துவதற்கு 14 கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஒரு ஊராட்சிக்கு ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உள்கட்டமைப்பு வசதிகள்
இந்த திட்டத்தின் கீழ் தனிநபர் மேம்பாடு, மனிதவள மேம்பாடு, சமூக வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி, சுற்றுப்புறச்சூழல் மேம்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் நல் நிர்வாகம் போன்றவற்றை, 100 சதவீதம் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளையும் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் செயல்படுத்த வேண்டும். மேலும், நீர்நிலை புனரமைத்தல், தெருக்கள், வீதிகள் மேம்படுத்துதல், தெரு விளக்குகள் அமைத்தல், சமத்துவ சுடுகாடுகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் செய்தல், பள்ளிகள் மேம்பாடு, பசுமை மற்றும் சுத்தமான கிராமம், வாழ்வாதாரம் மற்றும் சந்தைபடுத்துதல் வசதிகளை ஒருங்கிணைத்தல் போன்ற பணிகளை அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படுத்த வேண்டும் என அவர் கேட்டு கொண்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் உத்திரமேரூர் ஒன்றிய குழு தலைவர் ஹேமலதா ஞானசேகரன், துணைத்தலைவர் வசந்தி குமார், வேளாண் இணை இயக்குநர் கோல்டி பிரேமாவதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துகுமார், பாலாஜி, அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சிமன்ற பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story