குண்டர் தடுப்புச் சட்டத்தில் ரவுடி சிறையில் அடைப்பு
குண்டர் தடுப்புச் சட்டத்தில் ரவுடி சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, கொள்ளை மற்றும் அடிதடி வழக்குகளில் சம்பந்தப்பட்ட சிவகாஞ்சி போலீஸ் நிலைய குற்றவாளியான காஞ்சீபுரம், பல்லவர் மேடு, வ.உ.சி. தெருவை சேர்ந்த சதிஷ் என்ற ஓட்ட சதீஷ் (வயது 23) தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டதையடுத்து குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்திக்கு பரிந்துரை செய்தார். அவரது பரிந்துரையை ஏற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர், சதீஷை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story