பெருமாள் கோவில் தேரோட்டம்
பங்குனி மாத பிரம்மோற்சவ திருவிழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
108 திவ்யதேசங்களில் ஒன்றான காஞ்சீபுரம் கோமளவல்லி தாயார் சமேத யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி மாத பிரம்மோற்சவ திருவிழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து மூன்றாம் நாள் யதோக்தகாரி பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார். 7-ம் நாளான நேற்று யதோக்தகாரி பெருமாள் மேளதாளங்கள் முழங்க அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருளினார்.
பெருமாளுக்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது. பின்னர், டி.கே.நம்பி தெரு, செட்டித்தெரு வழியாக வரதராஜ பெருமாள் கோவில் சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். வழியெங்கும் அன்னதானம் நீர், மோர், வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story