வேளாண்மை பல்கலைக்கழக மாணவர்களை தொழில் முனைவோராக்குவோம் என்று புதிய துணைவேந்தர் கீதாலட்சுமி கூறினார்


வேளாண்மை பல்கலைக்கழக மாணவர்களை தொழில் முனைவோராக்குவோம் என்று  புதிய துணைவேந்தர் கீதாலட்சுமி கூறினார்
x
தினத்தந்தி 1 April 2022 7:37 PM IST (Updated: 1 April 2022 7:37 PM IST)
t-max-icont-min-icon

வேளாண்மை பல்கலைக்கழக மாணவர்களை தொழில் முனைவோராக்குவோம் என்று புதிய துணைவேந்தர் கீதாலட்சுமி கூறினார்


வடவள்ளி

வேளாண்மை பல்கலைக்கழக மாணவர்களை தொழில் முனைவோராக்குவோம் என்று  புதிய துணைவேந்தர் கீதாலட்சுமி கூறினார்.

பெண் துணை வேந்தர்

தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் புதிய துணை வேந்தராக பதவி ஏற்றுக் கொண்ட கீதாலட்சுமி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது

அகில இந்திய அளவில் முதல் முறையாக வேளாண்மை பல் கலைக் கழகத்தில் பெண் துணைவேந்தராக என்னை நியமித்த தமிழக கவர்னருக்கும் தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்து கொள் கிறேன். 

வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 70 சதவீத மாணவி கள், 30 சதவீத மாணவர்கள் படிக்கின்றனர். 

52 சதவீதத்திற்கும் அதிகமான பெண்கள் பணிபுரிகின்றனர். 
இந்த நிலையில் முதல் பெண் துணைவேந்தராக நியமித்தது மேலும் சிறப்பாக பணிபுரிய எனக்கு ஊக்கம் அளிக்கிறது.

 தற்போது பருவநிலை மாற்றம் என்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது.  அடுத்து தண்ணீர் பிரச்சினை உள்ளது. 

தண்ணீருக்காக நாம் அண்டை மாநிலங்களை நம்பி இருக்கக் கூடிய சூழ்நிலை உள்ளது. 

இயற்கை உரங்கள்

அடுத்தது மண் வளம். மண் வளத்தில் கரிமச்சத்து மிகவும் குறைந்து காணப்படுகிறது அதிகளவிலான செயற்கை உரங்கள் பயன்படுத்தியதே இதற்கு காரணம். 

இயற்கை உரங்களை பயன் படுத்தி அதற்கு தீர்வு காணப்படும். பல்வேறு துறைகளை ஒன்றிணைத்து விளைச்சலை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நானோ தொழில்நுட்பம் மூலம் தண்ணீர் மற்றும் உரங்கள் பயன்படுத்தும் முறை நவீனப்படுத்தப்படும். 

மாணவர்கள் வேலை தேடுபவராக இருக்காமல் வேலை கொடுப்பவர்களாக, தொழில் முனைவோர்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். 

புதிய தொழில்நுட்பங்களை கொண்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் சிறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

வேளாண் பெருவிழா

மேலும் பல்வேறு பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங் களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து மாணவர்களின் திறன் அதிகரிக்க வழிவகை செய்யப்படும்.

உழவன் செயலி வேளாண்மை பல்கலைக்கழக இணையத்துடன் இணைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் மேலும் பல தகவல்களை விவசாயிகள் பெறலாம். 

வேளாண்மை பல்கலைக்கழக பொன் விழா ஆண்டை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள விவசாயி கள் கலந்து கொள்ளும் வகையில் கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வேளாண் பெருவிழா நடத்த உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story