சிறுமுகை வனப்பகுதியில் அழுகிய நிலையில் பெண் யானை பிணமாக கிடந்தது


சிறுமுகை வனப்பகுதியில் அழுகிய நிலையில் பெண் யானை பிணமாக கிடந்தது
x
தினத்தந்தி 1 April 2022 7:53 PM IST (Updated: 1 April 2022 7:53 PM IST)
t-max-icont-min-icon

சிறுமுகை வனப்பகுதியில் அழுகிய நிலையில் பெண் யானை பிணமாக கிடந்தது


மேட்டுப்பாளையம்

சிறுமுகை வனப்பகுதியில் அழுகிய நிலையில் பெண் யானை பிணமாக கிடந்தது.

வனத்துறையினர் ரோந்து

கோவை மாவட்டம் சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட மோதூர் பெத்திக்குட்டை காப்புக்காடு மூலையூர் சரக வனப் பகுதியில்  சிறுமுகை வனத் துறையினர் ரோந்து சென்றனர். 

அப்போது அங்கு அழுகிய நிலையில் பெண் காட்டு யானை ஒன்று இறந்து கிடந்தது. இதை பார்த்து வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்த தகவலின் பேரில் மாவட்ட வன அலு வலர் அசோக்குமார், உதவி வனப்பாதுகாவலர் செந்தில் குமார், வன கால்நடை டாக்டர் சுகுமார், உதவி கால்நடை டாக்டர் தியாகராஜன், வனச்சரக அலுவலர் செந்தில்குமார் மற்றும் வனத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். 

உடற்கூறு பரிசோதனை

இதையடுத்து வனகால்நடை டாக்டர் சுகுமார் முன்னிலையில் இறந்த யானையின் உடற்கூறு பரிசோதனை செய்யப்பட்டது. 

மேலும் ஆய்வுக்காக யானையின் உடல் பாகங்களின் மாதிரி சேக ரிக்கப்பட்டு ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். 

அந்த ஆய்வு முடிவில் தான் யானையின் இறப்பிற்கான காரணம் தெரிய வரும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.


காட்டு யானை இறந்து கிடந்தது குறித்து அரசு வன கால்நடை டாக்டர் சுகுமார் கூறியதாவது

இறந்து கிடந்த பெண் காட்டு யானைக்கு 10 வயது இருக்கும். அது இறந்து ஒரு வாரத்திற்கு மேல் ஆனதால் மிகவும் அழுகிய நிலையில் காணப்பட்டது.

 யானையின் உடலில் மேல்பகுதியில் துப்பாக்கி குண்டு காயங்களோ, யானைகளோடு மோதியதால் ஏற்பட்ட காயங்களே இருப்பதாக தெரியவில்லை. 

கல்லீரல் நோய்

அந்த பகுதியில் மின்சார வயர்கள் செல்லாததால் மின்சாரம் தாக்கி இறந்து இருக்கவும் வாய்ப்பு இல்லை. 

இறந்து கிடந்த யானையின் உள்ளுறுப்புகள் அனைத்தும் சிதைந்த நிலையில் காணப்பட்டது. 

கல்லீரல் சிதைந்து முடிச்சு முடிச்சாக உள்ளது. இதனால் கல்லீரல் நோய் தாக்கி யானை இறந்து இருக்கலாம் என்று தெரிகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story