கோவில்பட்டி, துலுக்கப்பட்டி இடையே இரட்டை ரெயில் பாதையில் சிக்னல் அமைக்கும் பணி
கோவில்பட்டி, துலுக்கப்பட்டி இடையே இரட்டை ரெயில் பாதையில் சிக்னல் அமைக்கும் பணி நடந்து வருகிறது
கோவில்பட்டி:
தென் தமிழகத்தில் அதிவேக ரெயில்களை இயக்கவும், பயண நேரத்தை குறைக்கும் வகையிலும் தெற்கு ரெயில்வே சார்பில் மதுரை-தூத்துக்குடி இடையிலான 160 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிதாக இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு பகுதியாக பணிகள் முடிவடையும்போது அதனை ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே வாஞ்சி மணியாச்சி-தட்டப்பாறை, வாஞ்சி மணியாச்சி-கங்கைகொண்டான், வாஞ்சி மணியாச்சி-கடம்பூர், கோவில்பட்டி-கடம்பூர் இடையே பணிகள் முடிவுற்று ஆய்வு செய்யப்பட்டு, ரெயில் சோதனை ஓட்டமும் நடைபெற்று உள்ளது.
அதற்கு அடுத்தபடியாக கோவில்பட்டி முதல் துலுக்கப்பட்டி வரையிலான 33 கிலோமீட்டர் தொலைவுக்கு இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. அந்த பணிகளை கடந்த மாதம் 22-ந்தேதி தென்னக ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். மேலும் ரெயில் சோதனை ஓட்டமும் நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று அந்த பாதையில் சிக்னல் அமைக்கும் பணிகள் நடைபெற்றது. கோவில்பட்டி முதல் துலுக்கப்பட்டி ரெயில் நிலையம் வரை சிக்னல் அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளது. மேலும் மின்கம்பி உறுதித்தன்மை குறித்தும் இந்த பணியின்போது ஆய்வு செய்கின்றனர்.
Related Tags :
Next Story