பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம் - போலீஸ் சூப்பிரண்டு


பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம் - போலீஸ் சூப்பிரண்டு
x
தினத்தந்தி 1 April 2022 8:40 PM IST (Updated: 1 April 2022 8:40 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் வருண்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவள்ளூர் மாவட்டத்தில் மதுவிலக்கு அமல் பிரிவு மற்றும் போலீஸ் நிலையங்களில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள 303 இருசக்கர வாகனங்கள், 13 மூன்று சக்கர வாகனங்கள், 11 நான்கு சக்கர வாகனங்கள் கலெக்டரின் உத்தரவின்படி வருகின்ற 7, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் ஏலம் விடப்பட உள்ளது.

வாகனத்தை ஏலம் எடுக்க வருபவர்கள் முன்கட்டண தொகையாக இருசக்கர வாகனங்களுக்கு ரூபாய் ஆயிரமும், மூன்று சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு ரூ.5 ஆயிரமும் செலுத்த வேண்டும். வாகனங்களின் குறைந்தபட்ச மதிப்பீட்டுத் தொகை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அறிவிப்பு பலகையில் ஒட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஏலத்தில் கலந்துகொள்ள வருபவர்கள் ஆதார் கார்டு, அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டையை தவறாமல் கொண்டுவர வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.


Next Story