அஞ்சுவட்டத்தம்மன் வீதி உலா


அஞ்சுவட்டத்தம்மன் வீதி உலா
x
தினத்தந்தி 1 April 2022 9:54 PM IST (Updated: 1 April 2022 9:54 PM IST)
t-max-icont-min-icon

கீழ்வேளூரில் அஞ்சுவட்டத்தம்மன் வீதி உலா நடந்தது.

சிக்கல்:
கீழ்வேளூர் அட்சயலிங்க சாமி கோவிலில் பங்குனி பெருவிழா கடந்த மார்ச் 27-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ேகாவிலில் உள்ள அஞ்சுவட்டத்தம்மன் நேற்று முன்தினம் இரவு மஞ்சத்தில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. இதில் வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். வருகிற 6-ந்தேதி (புதன்கிழமை) தேரோட்டமும், 8-ந்தேதி (வெள்ளிக்கிழமை) விடையாற்றி விழாவும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Next Story