உரிய அனுமதி இல்லாமல் கேரளாவுக்கு கற்கள் கடத்திய டிரைவர் கைது
உரிய அனுமதி இல்லாமல் கேரளாவுக்கு கற்கள் கடத்திய டிரைவர் கைது செய்யப்பட்டார்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே மீனாட்சிபுரம் சோதனை சாவடியில் கனிமவளம், புவியியல் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக கேரளா நோக்கி கற்களை ஏற்றி வந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது உரிய அனுமதி இல்லாமல் கேரளாவுக்கு கற்களை ஏற்றி செல்வது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் லாரியுடன், டிரைவரை ஆனைமலை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் டிரைவர் கேரளா மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த ஜிவல் (வயது 29) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஜிவலை கைது செய்ததுடன், கற்களுடன் அந்த லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story