செவிலியர்களுக்கு மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் பணி வழங்க கோரி கலெக்டரிடம் மனு


செவிலியர்களுக்கு மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் பணி வழங்க கோரி கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 2 April 2022 12:33 AM IST (Updated: 2 April 2022 12:33 AM IST)
t-max-icont-min-icon

செவிலியர்களுக்கு மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் பணி வழங்க கோரி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

திருச்சி, ஏப்.2-
திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசுவிடம் நேற்று செவிலியர்கள் ெகாடுத்த மனுவில், கொரோனா பெருந்தொற்று கடந்த 2 ஆண்டுகளாக அனைத்து மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியது. திருச்சி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சை வழங்கும் பணியில் மாவட்ட நிர்வாகம் மூலம் 60-க்கும் மேற்பட்ட தற்காலிக செவிலியர்கள் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் பணியமர்த்தப்பட்டனர். அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.14 ஆயிரம் ஊதியமாக வழங்கப்பட்டது. முற்றிலும் தற்காலிக அடிப்படையில் பணியில் அமர்த்தப்பட்ட இவர்களுக்கு 3 மாதங்களுக்கு ஒரு முறை பணி நீட்டிப்பு வழங்கப்பட்டு வந்தது.
கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்த நிலையில் கடந்த மார்ச் மாதத்துடன் இவர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர். 60 பேரில் 7 பேருக்கு நிரந்தர பணி வழங்கப்பட்டது. மீதமுள்ள 53 பேருக்கு பணி வழங்கப்படவில்லை. எனவே தங்களுக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும், நிலுவையில் உள்ள ஊக்கத்தொகை மற்றும் கடந்த 3 மாத காலமாக வழங்கப்படாமல் உள்ள சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும். தொற்று காலத்தில் உயிரை பணயம் வைத்து பணி புரிந்த தங்களுக்கு, மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் பணிவாய்ப்பு வழங்க முன்னுரிமை வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டு இருந்தது.

Related Tags :
Next Story