பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு அளித்த டிரைவர் கைது


பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு அளித்த டிரைவர் கைது
x
தினத்தந்தி 2 April 2022 2:09 PM IST (Updated: 2 April 2022 2:09 PM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு அளித்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

செங்கல்பட்டு, 

செங்கல்பட்டு மாவட்டம் படாளம் அடுத்த கருணாகரசேரி பகுதியை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவரது மகன் அப்பு என்கிற பிரதாப் (வயது 26). கார் டிரைவர். இவர் 38 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் ரீதியில் துன்புறுத்தினார். அந்த பெண் கூச்சலிடவே அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்து கார் டிரைவர் பிரதாபை பிடித்து சரமாரியாக தாக்கினர். 

பின்னர் செங்கல்பட்டு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனைதொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த செங்கல்பட்டு மகளிர் போலீசார் பிரதாபை கைதுசெய்து செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சப்-ஜெயலில் அடைத்தனர்.

Next Story