மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பஸ் பயண அட்டை - கலெக்டர் வழங்கினார்
மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பஸ் பயண அட்டையை கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வழங்கினார்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் மாவட்டத்தில் 2022-2023-ம் நிதியாண்டிற்கு மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பஸ் பயண அட்டை வழங்கும் திட்டத்தின் கீழ் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு காஞ்சீபுரம் மாவட்டம், சென்னை மாவட்டம் முழுவதும் பயணிப்பதற்கும் மற்ற அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி பயில, பணிக்கு செல்ல மற்றும் மருத்துவ சிகிச்சையின் பொருட்டு செல்ல இலவச பயண அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
இந்த முகாமில் சுமார் 125 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மற்றும் பல்வகை ஊனத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர். இதில் உடல் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி இலவச பேருந்து பயண அட்டைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story