இ.எஸ்.ஐ. அலுவலகத்தில் போலி ஆவணங்கள் கொடுத்து பணியில் சேர்ந்த பீகார் வாலிபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார்

இ.எஸ்.ஐ. அலுவலகத்தில் போலி ஆவணங்கள் கொடுத்து பணியில் சேர்ந்த பீகார் வாலிபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார்
கோவை
இ.எஸ்.ஐ. அலுவலகத்தில் போலி ஆவணங்கள் கொடுத்து பணியில் சேர்ந்த பீகார் வாலிபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
பீகார் வாலிபர்
பீகார் மாநிலம் பாட்னா கோதிகரி கிராமத்தை சேர்ந்தவர் அலோக் குமார் (வயது 34). இவர் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள பயிற்சி நிறுவனத்தில் படித்தார்.
சென்னை மண்டல இயக்குனர் அலுவலகம் காப்பீட்டு நிறுவ னத்தின் பணிக்கான தேர்வை கடந்த 2015-ம் ஆண்டு அறிவித்தது.
அந்த தேர்வை அலோக்குமார் ஆள்மாறாட்டம் செய்து எழுதிய தாக தெரிகிறது. அந்த தேர்வில் அவர் தேர்ச்சி பெற்றார்.
இதைத்தொடர்ந்து அலோக்குமார் கோவை ராமநாதபுரத்தில் உள்ள இ.எஸ்.ஐ. துணை மண்டல அலுவலகத்தில் ஊழியராக பணிக்கு சேர்ந்தார்.அங்கு அவர் குறித்த ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டது.
போலி ஆவணங்கள்
இதில், புகைப்படம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் போலியானது என்பது தெரியவந்தது.
இது குறித்து அந்த நிறுவனம் சார்பில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
மேலும் அலோக்குமாரின் கைரேகை ஆய்வு செய்யப்பட்டது.
அதுவும் பொருந்தி போக வில்லை. எனவே அலோக்குமார் ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று இருக்கலாம் என்பது தெரிய வந்தது.
இது தொடர்பாக அந்த நிறுவன தலைமை அதிகாரிகள், அலோக்குமாரிடம் விளக்கம் கேட்டனர். ஆனால் அவர் உரிய பதில் அளிக்க வில்லை.
இதைத்தொடர்ந்து அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், ஆள்மாறாட்டம் செய்து பணிக்கு சேர்ந்த அலோக் குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை ராமநாதபுரம் துணை மண்டல அலுவலக உதவி இயக்குனர் ராமநாதபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில், ஆள்மாறாட்டம், மோசடி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் அலோக்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அவருக்கு உடந்தையாக இருந்த கூட்டாளி குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story