ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்த பெண் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்
ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்த பெண் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்
கோவை
கோவை ஆவாரம்பாளையம் சக்தி எஸ்டேட்டை சேர்ந்தவர் மனோகரன். இவருடைய மகள் கிருத்திகா (வயது28). இவர் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். தற்போது கோவையில் வீட்டில் இருந்தே வேலை பார்த்து வந்தார்.
அவருக்கு, மாப்பிள்ளை பார்த்து திருமணம் நிச்சயம் செய்ய ஏற்பாடு செய்து வந்தனர்.
இந்த நிலையில் கிருத்திகா, தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்று கூறியதாக தெரிகிறது.
இதை முன்கூட்டியே கூறி இருக்கலாமே என்று குடும்பத்தினர் கூறியதாக தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த கிருத்திகா வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story