வாழை இலை கட்டு ரூ.1000-க்கு விற்பனை
வாழை இலை கட்டு ரூ.1000-க்கு விற்பனை
பொள்ளாச்சி
பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில் வாரந்தோறும் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் வாழை இலை ஏலம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று வாழை இலை ஏலம் நடைபெற்றது. ஏலத்திற்கு பொள்ளாச்சி, ஆனைமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து விவசாயிகள் வாழை இலைகளை ஏலத்திற்கு கொண்டு வந்தனர். வியாபாரிகள் கலந்துகொண்டு போட்டி போட்டு ஏலம் எடுத்தனர்.
பெரிய கட்டுகளில் 500 இலைகள் வரையும், சிறிய கட்டுகளில் 250 இலைகள் வரையும் இருக்கும். இதற்கிடையில் தற்போது வரத்து அதிகரித்தும் விலை அதிகரிக்கவில்லை. ஒரு கட்டு ரூ.300 முதல் ரூ.1000 வரை ஏலம் போனது. தற்போது முகூர்த்த நாட்கள் இல்லாததால் வாழை இலை விலை குறைந்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story