என்ஜினில் ஏற்பட்ட திடீர் கோளாறால் ஊட்டி மலைரெயில் நடுவழியில் நின்றது. இதனால் மேட்டுப்பாளையத்திற்கு 3 மணி நேரம் தாமதமாக மலைரெயில் சென்றதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்
என்ஜினில் ஏற்பட்ட திடீர் கோளாறால் ஊட்டி மலைரெயில் நடுவழியில் நின்றது. இதனால் மேட்டுப்பாளையத்திற்கு 3 மணி நேரம் தாமதமாக மலைரெயில் சென்றதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்
மேட்டுப்பாளையம்
என்ஜினில் ஏற்பட்ட திடீர் கோளாறால் ஊட்டி மலைரெயில் நடுவழியில் நின்றது. இதனால் மேட்டுப்பாளையத்திற்கு 3 மணி நேரம் தாமதமாக மலைரெயில் சென்றதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
ஊட்டி மலைரெயில்
மலைகளின் அரசி என வர்ணிக்கப்படும் ஊட்டிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து அழகிய மலைரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
மலைரெயிலில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்து இயற்கை எழில் காட்சிகளை கண்டுரசித்து வருகின்றனர்.
மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு பர்னஸ் ஆயில் மூலம் நீராவி ரெயில் என்ஜின் இயக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த சில தினங்களாக மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு டீசல் ஆயில் மூலம் நீராவி ரெயில் என்ஜின் இயக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று ஊட்டியில் இருந்து 150 பயணிகளுடன் மலைரெயில் புறப்பட்டது. இந்த ரெயில் பிற்பகல் 3 மணிக்கு குன்னூர் ரெயில் நிலையத்தை அடைந்தது.
என்ஜினில் கோளாறு
பின்னர் அங்கிருந்து 3.15 மணிக்கு புறப்பட்ட மலைரெயில் மாலை சுமார் 5 மணிக்கு அட்ர்லி கல்லார் ரெயில் நிலையங்கள் இடையே வந்து கொண்டிருந்தது.
அப்போது திடீரென மலைரெயில் என்ஜினில் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து மலைரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
தொடர்ந்து இதுகுறித்து ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலையடுத்து உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் மேட்டுப்பாளையத்தில் இருந்து இரவு 7 மணிக்கு மாற்று ரெயில் என்ஜின் இயக்கப்பட்டு கல்லார் ரெயில் நிலையத்தை அடைந்தது.
அங்கு கோளாறு ஏற்பட்ட மலைரெயில் என்ஜின் கழற்றி விடப்பட்டு தனியாக நிறுத்தி வைக்கப்பட்டது. புதிய என்ஜினை மலைரெயிலுடன் இணைத்து இயக்கினர்.
3 மணி நேரம் தாமதம்
அங்கிருந்து புறப்பட்ட மலைரெயில் இரவு 8.30 மணிக்கு மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தை அடைந்தது.
சுமார் 3 மணி நேரம் தாமதமாக மலைரெயில் சென்றதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
Related Tags :
Next Story