பெருமாள் கோவில் பிரம்மோற்சவ தீர்த்தவாரி


பெருமாள் கோவில் பிரம்மோற்சவ தீர்த்தவாரி
x
தினத்தந்தி 3 April 2022 5:18 PM IST (Updated: 3 April 2022 5:18 PM IST)
t-max-icont-min-icon

தீர்த்தவாரி திருவிழா திருக்கோயில் வளாகத்தில் உள்ள திருக்குளத்தில் நடைபெற்றது.

108 திவ்யதேசத்தில் ஒன்றான, காஞ்சீபுரம் கோமளவல்லி தாயார் சமேத யதோக்தகாரி பெருமாள் கோவில் பங்குனி பிரம்மோற்சவ் திருவிழா, கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து 3-ம் நாள் யதோக்தகாரி பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார். 7-ம் நாள் யதோக்தகாரி பெருமாள் திருத்தேரில் எழுந்தருளினார்.

பெருமாளுக்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்று, பின்னர் டி.கே.நம்பி தெரு செட்டித்தெரு வழியாக வரதராஜ பெருமாள் கோவில் சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில், நேற்று தீர்த்தவாரி திருவிழா திருக்கோயில் வளாகத்தில் உள்ள திருக்குளத்தில் நடைபெற்றது.

பெருமாள் திருக்குளத்தில் தீர்த்தவாரி எழுந்தருளிய பின், பக்தர்கள் அனைவரும் திருக்குளத்தில் நீராடி மகிழ்ந்தனர்.

விழா ஏற்பாடுகளை பரம்பரை தர்மகர்த்தா நல்லப்பா நாராயணன் தலைமையில் விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.


Next Story