சிங்கப்பெருமாள் கோவில்- அனுமந்தபுரம் சாலையில் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதி
சிங்கப்பெருமாள் கோவில்- அனுமந்தபுரம் சாலையில் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதிக்ழகுள்ளாகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சி சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள ஊராட்சி. இங்கு தனியார் பன்னாட்டு நிறுவனங்கள், கார், மோட்டார் சைக்கிள் உதிரிபாகங்கள் தயாரிக்கும் கம்பெனிகள் ஆடை ஏற்றுமதி நிறுவனங்களில் வேலை பார்த்து வருகின்றனர்.
இதனால் சிங்கப்பெருமாள் கோவில்-அனுமந்தபுரம் சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். இதே சாலையில் இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பல்லவ காலத்து குடவரை கோவிலான பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவிலும், அனுமந்தபுரம் அகோர வீரபத்திரசாமி கோவிலும் உள்ளன. சாலையோர கடைக்கு வருவோர் தங்களது வாகனங்களை சாலையிலேயே நிறுத்திவிடுகின்றனர். ஆகையால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. மேலும் கட்டிடப்பணிகளுக்கு செல்லும் கனரக வாகனங்கள், பள்ளி, கல்லூரி வாகனங்களும் செல்வதால் இந்த இடத்தில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றன.
இவை சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் 4 பக்க சாலை வரை வாகனங்கள் நிற்பதால் தினம், தினம் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் அவதிக்ழகுள்ளாகின்றனர்.
இந்த கடுமையான போக்குவரத்து நெரிசலை சமாளிக்க கனரக வாகனங்களை மண்டபத்தெருவழியாக மாற்றியமைக்கவும், போதிய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு சாலையோர கடைகளை அகற்றினால் மட்டுமே நிரந்தர தீர்வு கிடைக்கும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
Related Tags :
Next Story