வாலாஜாபாத் ஒன்றியத்தில் டிரோன்கள் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் விவசாயிகள்
வாலாஜாபாத் ஒன்றியத்தில் டிரோன்கள் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் விவசாயிகள் பூச்சிக்கொல்லி மருந்தை தெளித்து வருகின்றனர்.
விவசாய தொழிலில் வேலையாட்கள் பற்றாக்குறை, ஊதிய உயர்வு உள்ளிட்ட காரணமாக நவீன தொழில்நுட்பத்திற்கு மாறியுள்ள விவசாயிகள், நிலத்தை உழுவதற்கு மாடுகளை மாற்றிவிட்டு டிராக்டர் மூலமும், தண்ணீர் பாய்ச்சுவதற்கு சொட்டு நீர் பாசனம், நாற்று நடுவதற்கும், அறுவடை செய்வதற்கும் வேலையாட்களுக்கு பதிலாக எந்திரங்களையும், பயன்படுத்தி விவசாயம் செய்து வருகின்றனர். பயிர்களைத் தாக்கும் பூச்சிகளை அழிப்பதற்கு மட்டும் வேலையாட்களை வைத்து மோட்டார் ஸ்பிரேயர் மூலம் பூச்சிக்கொல்லி மருந்தை தெளித்து வருகின்றனர்.
இந்நிலையில், காஞ்சீபுரம் மாவட்டத்தில் நிலத்தை உழுவதற்கும், தண்ணீர் பாய்ச்சுவதற்கும், நாற்று நடுவதற்கும், கதிர் அறுப்பதற்கும், நவீன தொழில்நுட்ப உத்திகளை கையாண்டு வரும் காஞ்சீபுரம் மாவட்ட விவசாயிகள், தற்போது மேலை நாடுகளுக்கு இணையாக பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிக்க டிரோன் எந்திரங்களையும் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம், பள்ளம்பாக்கம் கிராமத்தில் அதிகம் நெல் பயிர் செய்யும் விவசாயிகள் பயிர்களைத் தாக்கும் பூச்சிகளை அழிக்க வேலையாட்கள் மூலம் மோட்டார் ஸ்பிரேயர் வைத்து பூச்சி கொல்லி மருந்து தெளித்து வந்தனர்.
இதற்கு அதிக நேரமும், அதிக செலவும் பிடித்ததால், தற்போது பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க நவீன உத்திகள் மூலம் டிரோன்களை பயன்படுத்தி குறுகிய நேரத்தில் வேலையாட்கள் யாரும் இன்றி காலை, மாலை வேலைகளில் பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து பயிர்களைப் பாதுகாத்து வருகின்றனர். தற்போது இளம் விவசாயிகள் ஒரு சிலர் மட்டுமே டிரோன்களை பயன்படுத்தி வரும் நிலையில், அதன் பயன்பாடுகளை அறிந்து அனைத்து விவசாயிகளும் டிரோன்களை பயன்படுத்தும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பது நிதர்சன உண்மையாகியுள்ளது.
Related Tags :
Next Story